1. Home
  2. தமிழ்நாடு

இனி வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த காரை ஆர்டர் செய்யலாம்..!

1

வாடிக்கையாளர்கள் இனி தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த காரை ஆர்டர் செய்யலாம். மேலும் டோர் டெலிவரி வசதியும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.முதல் கட்டமாக 2024ம் ஆண்டு அமெரிக்காவில் இந்த திட்டத்தை இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்த உள்ளன.

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஹூண்டாய் (Hyundai). இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளை அமேசான் (Amazon) தளத்தின் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. ஆகையால், இனி வரும் நாட்களில் அமேசான் தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைப் போல கார்களும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதன் வாயிலாக நிறுவனத்தின் ஷோரூம் இல்லாத பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களாலும் எளிதில் ஹூண்டாய் கார்களை வாங்கிக் கொள்வதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது. வரும் 2024 ஆம் ஆண்டு முதலே அமேசான் தளத்தின் வாயிலாக தன்னுடைய கார்களை ஹூண்டாய் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

அமேசான் தளத்தின் வாயிலாக காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் நிறுவனம் அருகாமையில் உள்ள உள்ளூர் ஹூண்டாய் கார் விற்பனையாளர் வாயிலாக டெலிவரி வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் டெலிவரி செய்யவும் வழி வகைச் செய்யப்பட்டு இருக்கின்றது.

அமேசான் - ஹூண்டாய் இணைவிற்கான ஒப்பந்தம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே போடப்பட்டது ஆகும். இந்த நிலையிலேயே தற்போது அவர்களின் கூட்டணி தொடங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like