இனி மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை டிஜிட்டலில் பெற்று கொள்ளலாம்..!
வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரித்திலும் PhonePe என்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த செயலி மூலம் ஒரு முறை முன்பதிவு செய்யும்போது அதிகபட்சம் 6 டிக்கெட் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் அதிரடி ஆப்பர் உடன் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படும் வகையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.