1. Home
  2. தமிழ்நாடு

இனி 45 ரூபாயில் புதிய ரேஷன் அட்டை பெறலாம்..!

1

தமிழகத்தில் ரேஷன் கார்டு நகல் பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் வசதி, அஞ்சல் துறை வாயிலாக, விண்ணப்பதாரர் வீட்டுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பும் வசதி உள்ளது.

கார்டுதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தேர்ந்தெடுத்து, பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணை உள்ளீடு செய்தால், ஒருமுறை 'பாஸ்வேர்டு' அனுப்பப்படும். அதை பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம். நகல் அட்டைக்கான கட்டணம் ரூ.20, அஞ்சல் வழி பெறுவதற்கு ரூ.25 என, 45 ரூபாய் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து, ஒப்புகை பக்கம் மற்றும் பண பரிவர்த்தனை குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இரு வாரத்துக்குள் நகல் ரேஷன் கார்டு, விண்ணப்பதாரர் முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக அனுப்பப்படும்.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்திருந்தாலோ அல்லது முகவரி திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் ஆகிய திருத்தங்கள் செய்தபின், நகல் கார்டு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம்.

PHH என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும். இதே PHH - AAY என்ற குறியீடுள்ள ரேஷன் கார்டுக்கு, 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம். NPHH என்று குறிப்பிடப்பட்டுள்ள ரேஷன் கார்டில், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH - s என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம். அரிசி கிடைக்காது. ரேஷன் அட்டையில் NPHH - Nc என்று குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும். நியாய விலைக்கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.

Read more at: https://tamil.goodreturns.in/classroom/how-to-get-a-ration-card-within-15-days-in-tamil-nadu-check-details/articlecontent-pf123911-024317.html 

Trending News

Latest News

You May Like