1. Home
  2. தமிழ்நாடு

இனி வீட்டில் அமர்ந்தபடியே வாட்ஸ்அப்பில் மினி ஸ்டேட்மென்ட் பெறலாம்..! எப்படி தெரியுமா ?

1

வங்கி அறிக்கையைப் பெற நீங்கள் இனி வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியதில்லை.  இதன்படி, மூத்த குடிமக்கள் இனி வீட்டில் அமர்ந்தபடியே வாட்ஸ்அப்பில் பென்ஷன் சீட்டுகளைப் பெற முடியும். ஓய்வூதியம் பெறுவோர் வாட்ஸ்அப்பில் மொபைல் எண்களுக்கு செய்தி அனுப்புவதன் மூலம் ஓய்வூதிய சீட்டுகளை பெற முடியும். இது மட்டுமின்றி, வங்கியின் பொது கணக்கு வைத்திருப்பவர்களும் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வங்கி இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் சரிபார்க்கலாம்.

இந்த புதிய சேவையைப் பெற, வாடிக்கையாளர் 9022690226 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi அனுப்ப வேண்டும். அதன் பிறகு, கணக்கு இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் அல்லது பென்ஷன் ஸ்லிப் போன்ற உங்கள் விசாரணை குறித்து உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் பெற விரும்பும் வசதியை தேர்ந்தெடுத்தால், அதுதொடர்பான தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

எஸ்பிஐ வாட்ஸ் அப் வங்கி சேவை: எப்படி பதிவு செய்வது?

வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்த, முதலில் உங்கள் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். WAREG என உங்களது செல்போனில் டைப் செய்து அதன்பின்னர் இடைவெளி விட்டு உங்களது வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து இந்த SMS அனுப்பப்பட வேண்டும். பிறகு, உங்கள் செல்போனில் 9022690226 எண்ணைச் சேமிக்கவும். அதன்பின்னர், அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் Hi என அனுப்பினால், எந்த சேவையை பெற விரும்புகிறீர்கள் என கேட்கப்படும். இதையடுத்து, நீங்கள் பெற விரும்பும் வசதியை தேர்ந்தெடுத்தால், அதுதொடர்பான தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

அதே போல் மற்ற வங்கிகளின் எண்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

SBI -  9022690226

CANARA - 9076030001

INDIAN - 8554424242

HDFC - 7070022222

ICICI - 8640086400

AXIS - 7036165000

IDFC - 9555555555

KOTAK - 2266006022

UNION - 9666606060

YES - 8291201200

BOB - 843388777

BOI - 8376006006

Trending News

Latest News

You May Like