1. Home
  2. தமிழ்நாடு

இனி புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு ஜி பே பண்ணலாம்..!

1

மணக்குள விநாயகர் திருக்கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது.ஒரு வித பிரஞ்ச் சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிகுடா கடலுக்கு 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தென் சென்னையிலிருந்து 165 கி.மீ தொலைவில் இந்த கோவிலை அடையலாம்.

இக்கோயிலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது . சுற்றுலா பயணிகள் அர்ச்சனை சீட்டு அபிஷேகம் அன்னதானம் ஆகியவற்றுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர் . பணம் இருந்தால் மட்டுமே இக்கோயிலில் பக்தர்களிடம் நன்கொடை பெற்ற வந்தனர். பணம் கொண்டு வர முடியாத சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு நன்கொடை வழங்குவதில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.. 

இந்நிலையில் புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கையில் பணம் இல்லை என்றாலும் தனது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள இனிமேல் google pay , பே டீம், க்யூ ஆர் கோடு, மூலம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். நன்கொடையை வழங்கலாம்.

Trending News

Latest News

You May Like