1. Home
  2. தமிழ்நாடு

இனி தபால் நிலையத்திலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம்! எப்படி தெரியுமா!

1

நமது ரயில் டிக்கெட்களை நாம் பல வழிகளில் புக் செய்து கொள்ளலாம். பலரும் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் நிலையம் சென்றே டிக்கெட் புக் செய்வார்கள். ஆனால், தபால் நிலையங்களிலும் கூட ரயில்வே டிக்கெட் புக் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
 

தபால் துறை இந்திய ரயில்வே உடன் இணைந்து India Post Passenger Reservation System என்ற சேவையை வழங்குகிறது. இந்த ஐபிபிஆர்எஸ் திட்டம் மூலம் சில குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ரயில்வே நிலையம் இல்லாத ஊர்களில் இருப்போர் இதுபோல தபால் நிலையத்திலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம்.

இதற்கு உங்கள் ஏரியாவில் உள்ள தபால் நிலையங்களில் இந்த வசதி இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். அங்குச் செல்லும் போது அரசு அங்கீகரித்த ஐடி கார்டு (ஆதார், பாஸ்போர்ட்) எதாவது ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். அங்கு முன்பதிவு படிவத்தை வாங்கி தேவையான தகவல்களை நிரப்பித் தரவும். அதில் ரயில் எண் மற்றும் ரயில் பெயர், பயண தேதி, எங்கிருந்து எங்குச் செல்கிறீர்கள், பயணிகள் பெயர் உள்ளிட்ட தகவல்களைச் சரியாக நிரப்பித் தர வேண்டும்.

தபால் ஊழியர்கள் ஐடி கார்ட்டை கேட்டால் அதையும் கொடுங்கள். அங்குள்ள கவுண்டரில் பணம் செலுத்தினால் வேலை முடிஞ்சது.. அனைத்து தகவல்களையும் சரி பார்த்துவிட்டு தபால் ஊழியர்கள் டிக்கெட் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். இதன் மூலம் ரயில்வே நிலையத்திற்குச் செல்லாமலேயே ஈஸியாக டிக்கெட் போடலாம்.

தமிழ்நாட்டில் இப்போது 20 தபால் நிலையங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர், கல்பாக்கம், சென்னை ஐஐடி, சாஸ்திரி பவன், செஞ்சி, புதுக்கோட்டை, பொன்மலை, நெய்வேலி, கொடைக்கானல், ஆலங்குளம், சிவகாசி, திசையன்விளை, தேனி, பிஎன் புதூர், பள்ளிபாளையம், கோபிசெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை, ராசிபுரம், காந்திநகர் (திருப்பூர்), தாராபுரம் ஆகிய 20 தபால் நிலையங்களில் நீங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like