1. Home
  2. தமிழ்நாடு

இனி 10 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

1

சாதாரண நாள்களில் ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், நட்சத்திரங்களின் திரைப்படங்களின் வெளியீட்டின்போது ரூ.1000 வரையிலும் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்களில் சாதாரணமாகவே டிக்கெட் விலை ரூ.200 தாண்டித்தான் இருக்கிறது.

இந்த அதிகப்படியான விலை உயர்வின் காரணமாக மக்கள் தியேட்டர் பக்கம் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அவர்கள் பிடித்த ஹீரோக்களின் படம் வந்தால் மட்டுமே செல்கின்றனர். இதனால் பல சிறிய பட்ஜெட் நல்ல படங்கள் வந்தாலும் பெரிதாக ஓடுவது இல்லை.  

இந்நிலையில் நீங்கள் சினிமா டிக்கெட் வெறும் ௧௦ ரூபாய்க்கு வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

எப்படி இந்தச் சலுகையைப் பெறுவது?: இந்தச் சலுகையைப் பெற விரும்பும் பயனர்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, District app செயலியின் அறிவிப்புகளைக் கண்காணித்து, அதாவது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு, வெறும் ரூ.10-க்கு திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாய்ப்பை இந்த ஆப் வழங்குகிறது. ஆனால், இந்த சலுகையைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு. இது வெறும் 10 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.ஒரு நல்ல திரைப்படம் வெளியானால், இந்தச் சலுகையை விரைவாகப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம். எனவே, ஆர்வமுள்ள பயனர்கள் சரியாக 10 மணிக்கு தயாராக இருக்க வேண்டும்.

முன்பு, இதேபோன்ற சலுகைகளை தேசிய சினிமா தினங்கள் போன்ற சிறப்பு நாட்களில் மட்டுமே காண முடிந்தது. ஆனால், தற்போது வாராந்திர அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இத்தகைய ஒரு பெரிய தள்ளுபடியை வழங்குவது, இந்திய டிஜிட்டல் சந்தையில் அதிகரித்து வரும் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான புதிய உத்திகளைக் காட்டுகிறது.


 


 

Trending News

Latest News

You May Like