1. Home
  2. தமிழ்நாடு

இனி ஆன்லைனில் 'கூகுள் பிக்சல்' போனை வாங்கலாம்..!

1

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுள் இணையதளம், கூகுள் பிக்சல் என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், இயர் பட்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.
 

இந்தியாவில் இவற்றை, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் வாயிலாகவும், 'பிளிப்கார்ட்' என்ற வர்த்தக இணையதளம் வாயிலாகவும் மட்டுமே வாங்க முடியும்.
 

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆப்பிள்' நிறுவனம், தன் ஐபோன்களை இந்தியாவில் இணையதளம் வாயிலாக வாங்கும் வசதியை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. மேலும், டில்லி, மும்பையில் நேரடி விற்பனை நிலையங்களையும் துவக்கியுள்ளது.

தற்போது நம் நாட்டில் விற்பனையாகும் அதிக விலையுள்ள மொபைல் போன்கள் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு 55 சதவீதமாக உள்ளது. கூகுள் பிக்சலின் பங்கு 2 சதவீதம் மட்டும்தான்.
 

ஆப்பிள் நிறுவனத்தின் பாணியில், இந்தியாவில் விற்பனை மையங்களை துவங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன், தன் இணையதளத்தில் உள்ள கூகுள் ஆன்லைன் ஸ்டோர் வாயிலாக விற்பனையை நேற்று துவக்கியது.
 

ஆப்பிள் நிறுவனம், 45,000 ரூபாயில் இருந்து, 1.80 லட்சம் ரூபாய் விலைவரையிலான மொபைல் போன்களை இந்தியாவில் விற்கிறது. கூகுள் பிக்சல் நிறுவனத்தின் மொபைல் போன்கள் விலை, 30,000 ரூபாயில் இருந்து, 1.60 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
 

கூகுள் பிக்சல் மொபைல் போன்கள் தயாரிப்பு, இந்தியாவில் ஏற்கனவே நடந்து வருகிறது. தற்போது முதல் முறையாக நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்ய, இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், எந்தெந்த நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்களை துவக்கலாம் என்றும் ஆலோசித்து வருகிறது.

Trending News

Latest News

You May Like