1. Home
  2. தமிழ்நாடு

இனி ஒரு ரூபாய்க்கு காட்டன் நாப்கின் வாங்கலாம் ... எங்கு எப்படி வாங்குவது..?

1

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்திய மத்திய அரசு Aushadhi Suvidha Oxo-Biodegradable (மட்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான) சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை இந்திய பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கியது.

இந்த சானிட்டரி நாப்கின்கள் மிகவும் மலிவான, மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.பொதுவாக சராசரி சைஸ் மற்றும் xl சைஸ்களிலும் இந்த நாப்கின்கள் கிடைக்கின்றன.ஒரு நாப்கினின் விலை வெறும் 1 ரூபாய் மட்டுமே! ஒரு பாக்கெட்டில் 10 நாப்கின்கள் இருக்கும். அதன் விலை 10 ரூபாய் மட்டுமே.
xl சைஸ் சானிட்டரி நாப்கின்களில் விலை ஒரு பாக்கெட் 15 ரூபாய்.

மத்திய அரசின் இந்த ஜன ஆவுஷாதி சுவிதா ஆக்ஸோ மட்கும் சனிட்டரி நாப்கின்கள் (Aushadhi Suvidha Oxo-Biodegradable sanitary napkins) பிரதம மந்திரியின் மலிவு மருந்துகள் திட்டத்தின் கீழ் செயல்படும் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் மக்கள் மருந்தகம் என்கிற பெயரில் இந்த மருந்து கடைகள் செயல்படுகின்றன. பெரும்பாலும் எல்லா நகர்ப்புறங்களிலும் இந்த மருந்து கடைகள் செயல்படுகின்றன.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே பெண்களின் சுகாதார நிலைகளை மேம்படுத்துவது தான்.குறிப்பாக மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் அதிகரிப்பது,கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் உயர்தரமான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவித்தல், அதற்கான வழிமுறைகளை கற்றுத் தருதல்,சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

Trending News

Latest News

You May Like