1. Home
  2. தமிழ்நாடு

இனி நீங்கள் 1 கிலோ வெங்காயத்தை 30க்கு வாங்கலாம் : தமிழக அரசு அதிரடி..!

1

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெங்காய வரத்து குறைந்திருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் கிலோ 70-80 வரையும் வெளி கடைகளில் கிலோ ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதே நிலைமைதான் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தின் நேதாஜி தினசரி காய்கறி மற்றும் பழ சந்தைக்கு வரும் வெங்காயம் கணிசமாக குறைந்திருக்கிறது. இதன் காரணமாக முதல் தரம் வெங்காயம் கிலோ ரூ.70க்கும், இரண்டாம் தர வெங்காயம் ரூ.50க்கும் விற்பனையாகிறது.

வெங்காயத்தை பொறுத்த அளவில் மகாராஷ்டிர மற்றும் மத்தியப் பிரதேசத்தைதான் நம்பிதான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல மற்ற மாநிலங்களும் இதனை நம்பிதான் இருக்கின்றன. நாட்டில் உற்பத்தியாகும் மொத்த வெங்காயத்தில் 30.41 சதவீதம் மகாராஷ்டிர மாநிலத்தில் விளைகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா 15.51 சதவீதம், மத்திய பிரதேசம் 13.66 சதவீதம் விளைவிக்கிறது. தமிழ்நாட்டில் வெறும் 1.65% விளைச்சல்தான் இருக்கிறது. மகாராஷ்டிராவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழையை நம்பிதான் விவசாயிகள் வெங்காயத்தை விளைவிப்பார்கள்.

ஆனால் இந்த முறை மழை ஏமாற்றமளித்ததால் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்யவில்லை. எனவே அக்டோபர் மாதத்தில் நடைபெறும் வழக்கமான அறுவடை நடைபெறவில்லை. இதனால்தான் தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை 30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைஎடுத்துள்ளது. தேவை ஏற்பட்டால் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like