இனி ரேஷன் கார்டில் உங்கள் குழந்தை பெயரை ஈசியா சேர்க்கலாம்..! எப்படி தெரியுமா ?
ஆதார் கார்டு, பான் கார்டு போலவே ரேஷன் கார்டும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். ரேஷன் கார்டு மூலமாக அரசிடம் இலவச ரேஷன் பெறலாம். இது தவிர, ரேஷன் கார்டு என்பது முகவரிச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைப்பதும் அதிலுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதும் அவசியம்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கார்டில் தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம். ஆனால் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ரேஷன் கார்டில் உங்கள் குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டுமானால் உங்களுக்கு பல வகையான ஆவணங்கள் தேவைப்படும். முதலில், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தேவை. அதே சமயம், ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க விரும்பும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் அவசியம். ஒருவேளை குழந்தைக்கு ஆதார் கார்டு இருந்தால் அதுவும் தேவைப்படும்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழே முக்கியமான ஆவணம். முனிசிபல் கார்ப்பரேஷன், முனிசிபாலிட்டி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்ட இந்த ஆவணம் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் குழந்தையின் பெயரைச் சேர்ப்பதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டுமானால் குழந்தையின் ஆதார் அட்டையும் தேவை. உங்களிடம் இந்த ஆவணங்கள் இருந்தால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சென்று பெயரைச் சேர்ப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. குழந்தையின் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் போதும்.
ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட மீதமுள்ள ஆவணங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு விசாரணை நடத்தப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுடைய ரேஷன் கார்டில் குழந்தையின் பெயர் சேர்க்கப்படும்.
குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க என்ன செய்ய வேண்டும். முதலில் tnpds இன் இணையதளத்திற்கு ( https://www.tnpds.gov.in/) செல்ல வேண்டும். அதில் வலதுபுறத்தின் கீழ் பார்த்தீர்கள் என்றால் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும்.அதில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவைநிலை அறிய என ஐந்து ஆப்சன் இருக்கும். இந்த ஐந்து சேவைகளையும் ஆன்லைனிலேயே செய்ய முடியும். அதில் உறுப்பினரை சேர்க்க என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் ரேஷன் கார்டு வாங்குவதற்காக கொடுத்த அதாவது ரேஷன் கார்டு உடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை பதிவிடவேண்டும். அப்படி பதிவிட்டால் உங்கள் செல்போனுக்கு ஒரு ஒடிபி வரும்,. அதனை 300 வினாடிக்குள் பதிவு செய்ய வேண்டும்.பின்னர் தோன்றும் திரையில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த குடும்ப உறுப்பினர்களின் விவரம் இருக்கும். உதாரணமாக பெயர், குடும்ப அட்டை எண், நியாய விலை குறிடு, மற்றும் ஆதார் அட்டை இணைப்பு எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். உங்கள் குடும்பத்தின் தலைவர் மற்றும் அனைவரது விவரங்களும் இடம் பெற்றிருக்கும். கடைசியாக குடும்ப உறுப்பினரை சேர்க்க அவர்களின் விவரங்களை உங்களிடம் இணையதளம் கேட்கும்,. அதற்கு ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் இதில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. அதேநேரம் பிறந்த சான்றிதழை அதில் இணைத்த பின்னர் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது என்று திரையில் தோன்றும் பின்னர் 20 நாட்கள் கழித்து குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் உங்கள் குழந்தையின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 30 நாளில் உங்கள் குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். நீங்கள் குடும்ப அட்டையின் நிலையை தெரிந்து கொள்ள குறிப்பு எண் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து நீங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
.png)