1. Home
  2. தமிழ்நாடு

இனி திருப்பதி கோவிலில் சுடச்சுட மசாலா வடை!

Q

திருப்பதி பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தை மேலும் சுவையுடனும், தரத்துடனும் வழங்கத் தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்தது.
அதன்படி பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமான பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகின்றன. மேலும் உணவில் முந்திரி உள்ளிட்ட சுவை கூட்டக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசாலா வடை வழங்க முடிவு செய்தது.
அதன்படி சோதனையின் முறையில் நேற்று முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் சுட சுட சுவையான மசாலா வடை பரிமாறப்படுகிறது. இதனைப் பக்தர்கள் ருசித்துச் சாப்பிட்டனர்.
ஒரு வாரக் காலத்திற்கு தொடர்ந்து மசாலா வடை வழங்கத் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால் அனைத்து பக்தர்களுக்கும் மசாலா வடை வழங்கப்படும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 83,806 பேர் தரிசனம் செய்தனர். 23 352 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like