1. Home
  2. தமிழ்நாடு

இனி இவர்களுக்கும் ரூ.1000 கிடைக்கும் – அரசாணை வெளியீடு!

1

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சுமார் 1கோடியே 18 லட்சம் பேர் தற்போது பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்த 11.8 லட்சம் பேருக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

அதே போல தற்போது மறுவாழ்வு முகாம்களில் உள்ள பெண்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழகம் முழுவதும் உள்ள 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த 19487 குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. தற்போது மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத் தலைவருக்கு ரூ.1500, எனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 என மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like