1. Home
  2. தமிழ்நாடு

இனி இந்த குழந்தைகளுக்கு மாதம் 1000 ரூபாய்.!

1

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது, 

இதில் 1.14 கோடி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு ரூ.50,000, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி: ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18,000 + ரூ.4,000 மதிப்பு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. டாக்டர் தர்மாம்பாள் விதவை மறுமண உதவி திட்டத்திற்காக விதவைகளுக்கு 25ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 

இதே போல ஈ.வி.ஆர். மணியம்மையார் ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவிக்காக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் (பட்டதாரிகளுக்கு ரூ.50,000) வழங்கப்படுகிறது. மேலும் பல திருமண உதவித்திட்டங்களும் டைமுறைப்படுத்தப்படு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சமீபத்திய தகவல்களின்படி, மாநிலத்தில் எச்.ஐ.வி. பரவல் விகிதம் கணிசமாகக் குறைந்து 0.16% ஆக உள்ளது, இது தேசிய சராசரியான 0.23% ஐ விடக் குறைவாகும். 2010-ஆம் ஆண்டில் 0.38% ஆக இருந்த பரவல் விகிதம், விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் ஆதரவால் 2023-ல் 15-49 வயதுடையவர்களிடையே 0.20% ஆகக் குறைந்துள்ளது.

 தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் முயற்சிகளால் இந்தக் குறைவு சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் 16,80,083 பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்கின்றனர், இதில் தமிழகத்தில் 1,32,383 பேர் ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையில் (ART) உள்ளனர். 2019-ல் தமிழகத்தில் 3,01,000 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களாக மதிப்பிடப்பட்டனர்.

தமிழக அரசு 2009-ல் தொடங்கிய தமிழ்நாடு குழந்தைகளுக்கான எய்ட்ஸ் அறக்கட்டளை (TNTCAA) மூலம் 25 கோடி ரூபாய் நிதியுடன் 7,618 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட சோதனை மையங்கள் மூலம் இலவச மருந்துகள் வழங்கப்படுகின்றன. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளில் தமிழகம் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனிடையே

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 21 அன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி, மேலும் இது 7,618 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதி கொடையாளர் தினம் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த பட்ஜெட்டில் மருத்துவத்துறை சார்ந்து 118 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில் பல திட்டங்களை செய்து வருகிறோம். அதில் இந்த துறை சார்பாக 3 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமானது அறிவிப்பான மூன்று முக்கிய அறிவிப்புகள் இன்று செயலாக்கப்பட உள்ளன. எய்ட்ஸ் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்கி வைக்கிறோம் என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like