1. Home
  2. தமிழ்நாடு

இனி வழக்கு விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் : தலைமை நீதிபதி..!

1

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெயில் மூலம் மட்டுமின்றி வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவிக்கின்றனர்.  இதன் காரணமாக நேரம் மிச்சமாவதோடு மட்டுமல்லாமல், விரைவாகவும் தகவல்கள் தெரிய படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்த்தில் நடைபெற்ற தனியார் சொத்துகளை அரசு கையகப்படுத்தி பொது நலனுக்காக பயன்படுத்துவது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.  அந்த விசாரணையின் போது,  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ‘சுப்ரீம் கோர்ட் தகவல்தொழில்நுட்பச் சேவையில் வாட்ஸ்ஆப் சேவையும் இணைக்கப்படும்’ என்று அவர் அறிவித்தார்.

Trending News

Latest News

You May Like