1. Home
  2. தமிழ்நாடு

இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

Q

நாம் தமிழர் கட்சியை ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இனி நாம் தமிழர் கட்சி தங்களுக்கென தனி சின்னத்தை தேர்வு செய்து அதனை தங்கள் கட்சி சின்னமாக பெற முயற்சி மேற்கொள்ளலாம். கடந்த 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு பெற முடியாமல் பிறகு மைக் (ஒலிவாங்கி) சின்னத்தை பெற்று தேர்தலில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அங்கீகாரம் பெற்றது குறித்து அக்கட்சி தலைமை தங்கள் சமூக வலைதள பக்கத்தில், ” நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இவ்வறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று (10-01-2025) இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like