இனி இவருக்கு பதில் இவர்..! விஜய் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றுதான் நீ நான் காதல். இந்த சீரியல் 2023 ஆம் ஆண்டு நிறைய புது முகங்களோடு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது வரை 200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதோடு காதல் கதையை மையப்படுத்தி வரும் இந்த தொடர் ஹிந்தி தொடரின் ரீமேக்காக உள்ளது.
ராகவ் - அபிநயா, ஆகாஷ் - அணு ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. அணு என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் சாய் காயத்ரி.
இந்த நிலையில், நீ நான் காதல் சீரியல் இருந்து அவர் திடீரென விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நடிகை அக்ஷிதா இனி அணு கேரக்டரில் நடிக்க உள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.