1. Home
  2. தமிழ்நாடு

இனி 'முத்ரா' லோனிற்கு e-KYC கட்டாயம்..!

Q

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத வேளாண் தொழில் சேராத நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன. இந்த திட்டத்தின் படி 3 பிரிவுகளாக கடனுதவி அளிக்கப்படுகிறது. சிஷு என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் வரையிலும் கிஷோர் என்ற பெயரில் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 5 லட்சம் வரையிலும் தருண் என்ற பெயரில் ரூ 5 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.

விவசாயம் , அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இந்த திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்த கடனுக்கு எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும். இதற்கான விண்ணப்பங்கள் உங்கள் அருகில் இருக்கும் வங்கிகளிலேயே கிடைக்கும்.

நடந்து முடிந்த பட்ஜெட்டில் முத்ரா கடன் உதவி திட்டம் ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

இத்திட்டம் தற்போது பரவலாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்ரா கடன்களை வழங்குவதற்கான தகுதி மற்றும் அளவுகோல்களை கடுமையாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலியான விண்ணப்பங்களை வைத்து பெறப்படும் கடன்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஆயோக்கின் பரிந்துரைகள்: "இம்பேக்ட் அசெஸ்மென்ட் ஆஃப் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தனது சமீபத்திய அறிக்கையில், கடன் மதிப்பீட்டிற்கு டிஜிட்டல் கேஒய்சி (e-KYC) செயல்முறையை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு செயல்முறை கடன் பெறுபவரின் தகுதியை மதிப்பிடுவதை எளிதாக்கி, திட்டத்தின் நன்மைகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும். டிஜிட்டல் கேஒய்சி செயல்முறைக்கு மாறுவது கடன் விண்ணப்ப செயல்முறையை சற்று சிக்கலாக்கும் என்றாலும், பாதுகாப்பான மற்றும் சரியான நபர்களுக்கு கடன் சென்றடைய வழிவகை செய்யும்.

Trending News

Latest News

You May Like