1. Home
  2. தமிழ்நாடு

இனி துபாய் டூ அபுதாபி.. வெறும் 10 நிமிடத்தில் போயிடலாம்..! எப்படி தெரியுமா ?

1

துபாய் மற்றும் அபுதாபி இடையிலான ஏர் டாக்ஸி விரைவில் அறிமுகமாகிறது. இந்த ஏர் டாக்சி மூலமாக துபாய் மற்றும் அபுதாபி இடையிலான பயண நேரம் 10 முதல் 20 நிமிடங்களில் முடியும் என கூறப்படுகிறது. மேலும் இதற்கான கட்டணம் 800 திர்ஹாம் முதல் 1200 திர்ஹாம் வரை இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

துபாய் மற்றும் அபுதாபி இடையிலான இந்த ஏர் டாக்ஸி குறித்த இந்த டாக்ஸின் நிறுவனமான Archer Aviation நிறுவனத் வணிக அலுவலர் நிகில் கோயல் கூறும்போது, எதிர்காலத்தை நோக்கிய அம்சமாக இது இருக்கும் என்றார். மேலும் இந்த ஏர் டாக்ஸி நகர்புரத்தினுள் செயல்படும்போது அதன் கட்டணமானது 300 முதல் 350 திர்ஹாம் ஆக இருக்கும் எனவும் எமிரட்களுக்கு மத்தியிலும் செல்லும்போது 800 முதல் 1200 திர்ஹாம் கட்டணம் இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.சுமார் 138 கிலோமீட்டர் தூரத்தில் துபாய் மற்றும் அபுதாபி அமைந்திருக்கிறது. சாதாரணமாக 60 முதல் 90 நிமிடங்கள் இந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணம் நேரம் இருக்கும். ஆனால் இந்த ஏர் டாக்ஸி மூலமாக பயண நேரமானது 10 முதல் 20 நிமிடங்களில் முடியும் என குறிப்பிட்டு இருக்கிறது. துபாய் மற்றும் அபு தாபி இடையிலான ஏர் டாக்ஸியின் செயல்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும் 2025 ஆண்டுக்குள் இந்த ஏர் டாக்ஸி செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Trending News

Latest News

You May Like