1. Home
  2. தமிழ்நாடு

இனி குற்றாலம் அருவியில் இந்த நேரத்தில் மட்டும் தான் குளிக்க அனுமதி..!

1

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இதேபோல் நெல்லை தென்காசியில் உள்ள அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு குற்றாலம் மெயின் அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு குளித்து கொண்டிருந்த 17 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான்.இதையடுத்து பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பழைய அருவியில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கூறினார்.

Trending News

Latest News

You May Like