இனி எல்லா மேட்ச்சும் ஹாட்ஸ்டாரில் மட்டுமே.. ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகள் பார்க்க முடியாது..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோ சினிமா (Jio Cinema) ஸ்ட்ரீமிங் சேவையை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் (Disney+ Hotstar) இணைக்க உள்ளது.அதன்படி, ஜியோ சினிமா வீடியோக்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இனி கண்டுகளிக்கலாம். ரிலையன்ஸ் நிறுவனமும், ஒரு தரப்பு பார்வையாளர்களுக்கு இரண்டு தளங்களை ஊக்குவிப்பது சரியல்ல என்பதை புரிந்துகொண்டுள்ளது. இதனால், வரும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்ப நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் எதார்த்தத்தில் சாத்தியப்படும் பட்சத்தில், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடி போட்டியை மேற்கொள்ளலாம் என ரிலையன்ஸ் நன்புவதாகக் கூறப்பட்டுள்ளது.