1. Home
  2. தமிழ்நாடு

இனி உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாள் விடுப்பு..!

1

உறுப்பு தானம் செய்வது மிகவும் உன்னதமான செயல். இதை மத்திய அரசு ஊழியர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தப் புதிய விதியானது ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சிறப்பு விடுப்பு தற்போது 30 நாட்களாக உள்ளது. அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியருக்கு இனி அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-க்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். இந்த சிறப்பு விடுப்பு, இதர விடுப்புகளுடன் இணைக்கப்படாது.. சிகிச்சை ஒரு வாரம் முன்னதாகவே விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். அதேபோல, இந்த 42 நாள் விடுமுறையை, பணியாளர்களின் உடல்நலன் மற்றும் சௌகரியத்திற்கு ஏற்றதுபோல பிரித்து, வெவ்வேறு நாட்களிலும் எடுத்துக் கொள்ள முடியும்.

உறுப்பு தானத்துக்கான சிகிச்சையை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், சம்பந்தப்பட்ட துறைதலைவரின் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை தெரிவித்துள்ளது.

கொடையாக வழங்கப்படும் உறுப்பை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவும், அதன் பின்னர் இதில் இருந்து மீண்டு வருவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்ற நிலையிலும் இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. சிகிச்சை முன் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகும் தேவைப்படுகின்ற ஓய்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் விடுப்பு நாட்களின் எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like