1. Home
  2. தமிழ்நாடு

இனி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி..!

1

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பணத்தை பந்தையமாக வைத்து விளையாடும் கேசினோ அமைப்புகள், குதிரைப்பந்தையத்திற்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனக்கூறியுள்ளார். 

மேலும் செயற்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்த அவர், தனியார் நிறுவனங்கள் சேவை வழங்கினால் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்கள் சேவை வழங்கினால் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்படும் என்றார். தொடர்ந்து புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும் என கூறிய அவர் செயற்கை ஜரிகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் இனி 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட பருத்திக்கு பழைய ஜிஎஸ்டி வரி பாக்கி ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like