1. Home
  2. தமிழ்நாடு

இன்று நவம்பர் 26 - இந்திய அரசியலமைப்பு சாசன தினம்!

1

 இந்திய அரசியல் சாசனத்தை எடுத்துக்கொண்டதை நினைவூட்டும் வகையில் இந்தியாவில் இந்திய அரசியலமைப்பு சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த முதன்மை வடிவமைப்பாளர் ஆவார். வடிவமைப்பு குழுவின் சேர்மனாக இருந்தார். இவர் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். இவர் பல்வேறு சட்டங்களை வடிவமைத்தவர். சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளை மையமாகக்கொண்டு சீர்திருத்த சட்டங்களை வடிவமைத்தார்.

டாக்டர் அம்பேத்கர், சட்ட வடிவமைப்பு குழுவின் சேர்மனாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்தக்குழு தான் புதிய அரசியலமைப்பு சாசனத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்ததை தவிர அம்பேத்கர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. விளிம்பு நிலை மனிதர்களின் உரிமைக்காக போராடியவர். இவர் சமூக பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.அரசியல் அமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமைகளை சேர்த்ததில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார். உரிமைகளை பாதுகாப்பது மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகிய வசதிகளை அவர் சட்டத்தில் சேர்த்தார்.

தலித் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர். தீண்டாமைக்கும் எதிராக போராடினார். தலித் மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுப்பட்டார்.சட்டம் சமூக நீதி மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றில் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு ஆகியவை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இவருக்கு இறந்த பின் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. 1990ம் ஆண்டில் வழக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய விருது.

அந்த வகையில் இந்தாண்டு 75வது அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளை அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள்/ கருத்தரங்குகள்/ வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.

Trending News

Latest News

You May Like