புதுச்சேரியின் விடுதலை தின விழா! காரைக்காலில் கோலாகல கொண்டாட்டம் !

காரைக்காலில் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரியின் விடுதலை தின விழாவை யொட்டி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரஞ்சு இந்திய பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்கள் இணைந்த நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அணிவகுப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், காவல்துறையினர் முகக்கவசம் அணிந்து அணிவகுப்பில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் அரசு அதிகாரிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.