குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. மொத்தம் 10,178 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எழுதினர்.
தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால், அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.