செம அறிவிப்பு..! இனி சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பவர்களுக்கான வெகுமதி 25000 ரூபாயாக அதிகரிப்பு..!

நாக்பூரில் நடிகர் அனுபம் கேருடன் அமைச்சர் நிதின் கட்கரி சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.
அந்த நிகழ்வின்போது அவர் பேசியதாவது:- சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (ஒரு மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுடைய உயிரைக் காப்பற்ற முடியும். இத்தகைய பணியைச் செய்பவர்களுக்கு வெகுமதியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவாக உள்ளதால் இந்தத் தொகையை 5 மடங்கு, ரூ.25 ஆயிரம் உயர்த்த சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கு மட்டும் அல்ல, மாநில நெடுஞ்சாலைகளில் காயம் அடைந்தவர்களுக்கும் பொருந்தும். பொதுமக்களை ஊக்குவிப்பதற்கான இந்த வெகுமதி திட்டம் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டது. பணம், வெகுமதியை எதிர்பார்க்காமல் விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தானாக முன்வந்து முதலுதவி செய்வது, உடனடி சிகிச்சை கிடைக்க உதவி செய்வது நம் அனைவரின் கடமையாகும் என்று அவர் கூறினார்.