1. Home
  2. தமிழ்நாடு

செம அறிவிப்பு..! இனி பொதுமக்களின் மனுக்கள் 45 நாள்களுக்குள் தீர்வு... தமிழக அரசு முடிவு..!

1

அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும். இதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒவ்வொரு அதிகாரிக்கும் குறிப்பிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த துறைச் செயலாளருடன் இணைந்து புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்த உள்ளோம். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூலை 15) தொடங்கி வைக்க உள்ளார். அந்தத் துறையின் சிறப்பு அதிகாரியாக என்னை நியமித்துள்ளனர்.

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

இதில், மக்களுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. திருப்தி இல்லை என்றால் மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்படி, அந்த அதிகாரிக்கு மீண்டும் நியாபகப்படுத்தப்படும். அதிலும் தீர்வு காணப்பட வில்லையெனில், அந்த அதிகாரிக்கு மேல் உள்ள உயர் அதிகாரிக்கு அந்த மனு அனுப்பி வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு முகாம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 10 ஆயிரம் மக்களுக்கு ஒரு முகாம் நடத்தப்படுகிறது. மேலும், நாளை (ஜூலை 15) முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கப்படுவதால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த முகாம் நடைபெறுவதற்கு முன்பாக முகாம் நடைபெறும் இடம், தேதி, நேரம் உள்ளிட்டவை குறித்து பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் என்னென்ன சேவைகள் உள்ளன. இதில், பங்கேற்பதற்கு என்ன ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து முன்னதாகவே தெரிவிக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும். இந்தப் பணியில் சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த முகாமானது நாளை ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

நகர்ப்புறத்தில் 3,738 ஊரகப் பகுதிகளில் 6,232 என மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் நடைபெறுவது குறித்து ஒரு வாரத்துக்கு முன்பாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 

Trending News

Latest News

You May Like