செம அறிவிப்பு..! வெறும் 40,000 ரூபாயில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்ததாக போட்டி போட்டு உருவாக்கி வருவது ரிமூவபிள் அல்லது ஸ்வாப்பபிள் பேட்டரிக்களைத் தான். ஃபிக்ஸ்டு பேட்டரிக்களுடனான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது சந்தையில் நிரம்பி வழிகின்றன. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை கொடுக்கும் பொருட்டு, ஸ்வாப்பபிள் அல்லது ரிமூவபிள் பேட்டரிக்களை அதிக செயல்திறனுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
ஓலாவும் அப்படியான ஒரே பேட்டரிக்கான காப்புரிமைக்கு இந்தாண்டு ஜூலை மாதம் பதிவு செய்திருந்தது. அந்த ரிமூவபிள் பேட்டரியுடன் கூடிய புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடலாம் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Gig மற்றும் S1 Z ரேஞ்ச் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. மிக குறைந்த விலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால பங்கு விலை உயர்ந்துள்ளது. அதாவது மின்சார வாகனங்களின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், வெறும் ரூ.40,000க்கு மின்சார வாகனத்தை ஓலா எலக்ட்ரிக் வெளியிட உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி ஓலா கிக், ஓலா கிக்+, ஓலா எஸ்1 இசட் மற்றும் ஓலா எஸ்1 இசட்+ ஆகியவற்றை முறையே ரூ.39,999, ரூ.49,999, ரூ.59,999 மற்றும் ரூ.64,999 விலையில் இருக்கும் என தெரிவித்தது. இது எஸ்க் ஷோரூம் விலையாகும்.
இந்த குறைந்த விலை புதிய மாடல் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நவம்பர் 26 முதல் கிக் மற்றும் S1 Z சீரிஸ் ஸ்கூட்டரை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.