செம அறிவிப்பு..! இனி மகளிர் உரிமைத் தொகை இவர்களும் வாங்கலாம்..!
முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கிய "உங்களுடன் ஸ்டாலின்" (Ungaludan Stalin) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முகாம்கள் ஜூலை 15 முதல் நவம்பர் வரை சுழற்சி முறையில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்களுக்கு இந்த முகாம்கள் மூலம் தீர்வு காணலாம். மேலும் மகளிர் உரிமைத்தொகைக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த முகாம்களில் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் முன்பு நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் (ஆதார் இணைக்கப்பட்டது) மற்றும் மின் கட்டண ரசீது, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயம்.
விண்ணப்ப செயல்முறை
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், 45 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும். உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், செப்டம்பர் 2025 முதல் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும்.
தகுதி மற்றும் விலக்குகள்
இத்திட்டம் ஏழை பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், வருமான வரி செலுத்துபவர்கள், நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் (மானிய வாகனங்கள் தவிர), அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியர்கள் (குறைந்த ஓய்வூதியம் உள்ளவர்கள் விதிவிலக்கு) விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பெண்கள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.
பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் எப்படி விண்ணப்பிப்பது?
2025-26 பட்ஜெட்டில் ரூ.13,807 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 1.06 கோடி பெண்களை அடையாளம் கண்டுள்ளது. இது வறுமையை ஒழிக்கும் முயற்சியாகவும், பெண்கள் உரிமையை வலுப்படுத்தும் திட்டமாகவும் தமிழக அரசின் சாப்ரில் பார்க்கப்படுகிறது. உங்கள் தாலுகா அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தேதிகளை விசாரிக்கவும். அரசு இணையதளமான tn.gov.in அல்லது kmut.tn.gov.in-இல் விவரங்கள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்டங்களில் முக்கியமானது, இது பெண்கள் மேம்பாட்டுக்கு உதவுகிறது.