பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி திடீர் கைது.. அண்ணாமலை கண்டனம்!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. பாஜக ஆதரவாளரும், வலதுசாரி சிந்தனையாளரும், மேடைப்பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான இவர் மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார்.
இதனிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பத்ரி சேஷாத்ரி பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பெரிய அது என்ன வார்த்தையை கூறுவது என்று தெரியவில்லை. உங்களால் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கி செய்வோம். நம் சந்திரசூட் (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி) கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு மணிப்பூர் செல்லுங்கள் சார். சென்று அங்கு ஏதாவது அமைதியை கொண்டுவர முடியுமா என்று நீங்கள் பாருங்கள். சும்மா சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் ஏதாவது பேசவேண்டியது.
நீதிமன்றமாக நீ அரசாங்கத்திற்குள் நுழையமுடியுமா? அவர்கள் (ஒன்றிய அரசு, மணிப்பூர் அரசு) செய்து கொண்டிருப்பதில் என்ன குறை கண்டீர்கள்? 2 பேர் அடித்துக்கொள்கிறார்கள். அது ஒரு மலைப்பாங்கான பகுதி. மிகவும் சிக்கலான நிலப்பரப்பு. அதற்குள் கொலை நடக்கத்தான் நடக்கும். அவர்கள் ஏன் அடித்துக்கொண்டார்கள்? அடித்துக்கொண்டார்கள் என்ற காரணத்தை நீங்கள் முன்கூட்டியே தடுத்திருக்க முடியுமா? அதெல்லாம் அவ்வளவு சுலபமாக முடியாது” என்றார்.
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவருடைய கருத்து இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் பத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியதற்கு பத்ரி அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு @bseshadri அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) July 29, 2023
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.
ஊழல்…
பத்ரியின் கைதுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழ்நாடு போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழ்நாடு போலீசாரின் பணியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.