1. Home
  2. தமிழ்நாடு

பிரபல அரசியல் தலைவர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி..!

1

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் வயிறு குடல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த கார்த்தி சிதம்பரம் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே சிகிச்சையின் ஒரு பகுதியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு இன்று மைனர் சர்ஜரியும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே இது குறித்து அறிக்கை விடுத்துள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், கார்த்தி சிதம்பரம் குணம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

அட்வான்ஸ் டெக்னாலஜியில் சிறியளவில் துளையிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை என்பதால் கார்த்தி சிதம்பரம் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது. எனினும் அவர் ஓரிரு வாரங்கள் ஓய்வெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.ஆதரவாளர்கள் யாரும் அப்போலோ மருத்துவமனைக்கு வர வேண்டாம் எனவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Trending News

Latest News

You May Like