1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் கட்சி தொடங்குகிறார் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்..!

1

நாட்டில் முக்கிய தேர்தல் ஆலோசகராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014இல் மோடி முதல்முறையாகத் தேர்தலில் வென்ற போது பிரசாந்த் கிஷோர் தான் அவருக்குத் தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்து இருந்தார்.அதன் பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். ஓரிரு தேர்தல்களைத் தவிர மற்றவற்றில் அவர் இணைந்து பணியாற்றிய கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் அவர் தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தார். அதன் பிறகு நேரடியாக யாருக்கும் அவர் தேர்தல் ஆலோசகராக பணியாற்றவில்லை. இடையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாகப் பல கட்டமாகப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடந்தது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை.

இதையடுத்து அவர் பீகாரில் ஜான் சுராஜ் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார் மேலும், அவர் அங்குத் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதேநேரம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தேசிய அரசியல் குறித்து கருத்துச் சொல்லவும் அவர் தவறுவதில்லை.

இதற்கிடையே அவர் தனது ஜான் சுராஜ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளார். பிரசாந்த் கிஷோரின் சொந்த மாநிலம் பீகார். அங்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், அதை மனதில் வைத்தே பிரசாந்த் கிஷோர் தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் எனத் தெரிகிறது.பீகாரில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதை மனதில் வைத்தே அவர் அரசியல் கட்சியைத் தொடங்க இருக்கிறார். அவர் எப்போது தனது ஜான் சுராஜ் அமைப்பைக் கட்சியாக மாற்றப்போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அவர் அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்றே கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like