பிரபல திரைப்பட வசனகர்த்தா காலமானார்..!

நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இதன் கதைக்களமும் வசனங்களும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைப்பட ஆர்வலர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ராசீ தங்கதுரை.
இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ராசீ தங்கதுரை. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘தேன்’ உள்ளிட்ட சில படங்களுக்கும் அவர் வசனம் எழுதியுள்ளார்.'மேற்குத்தொடர்ச்சி மலை'யில் கவனம் ஈர்த்த ராசி தங்கதுரை தேன் படத்திலும் தனித்துவ வசனங்களால் அனைவரின் பாராட்டுகளை பெற்றவர்
’தேன்’ படத்திற்கு வசனம் எழுதியது மட்டுமல்லாது அந்தப் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவும் செய்திருந்தார். 53 வயதாகும் ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று ஆண்டிப்பட்டியில் காலமானார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.