பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்..!
யார் இந்த வசந்தி தேவி? - “ஒரு மாணவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் படிப்பவராக இருக்கலாம்; அவர் படித்து முடித்து வெளியே செல்லும்போது சமூகக் கல்வியையும் சேர்த்து முடித்திருக்க வேண்டும். இந்தியக் கல்வி நிறுவனங்களோ சமூகத்துடன் மாணவர்கள் கலந்துவிடாமல், தம்மைச் சுற்றி தடித்த சுவர்களை உயரமான அளவில் எழுப்பி வைத்திருக்கின்றன” என்று அடிக்கடி கூறிய வசந்தி தேவி, தன்னுடைய பணிக் காலம் முழுவதும் இந்தச் சூழலை மாற்றச் செயல்பட்டவர்.
வசந்தி தேவி 2016-ஆம் ஆண்டு ஆர்.கே.நகரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பல்வேறு கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு காரணமாக இருந்தவர் வசந்தி தேவி. தமிழகத்தில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளார் இவர்.
வசந்தி தேவி தொடங்கிய 'கல்வி' எனும் அமைப்பு, அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி கிடைக்க பாடுபட்டு வருகிறது.
பிரபல கல்வியாளரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி(86) காலமானார். அவர் உடல் சென்னை வேளச்சேரி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.