1. Home
  2. தமிழ்நாடு

எதிர்க்கட்சி அல்ல.. ஆளும்கட்சியே இலக்கு.. அதிரடி காட்டிய அண்ணாமலை..!

எதிர்க்கட்சி அல்ல.. ஆளும்கட்சியே இலக்கு.. அதிரடி காட்டிய அண்ணாமலை..!


சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் பாஜக சார்பில் மலைவாழ் மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மலைவாழ் மக்கள் ஒருங்கிணைந்து அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மத்திய அரசின் நிதியை பெற்று பயனடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார். பின்னர், மலைவாழ் மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Image
அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் ஊழல் குறித்து கூறினால் வழக்கு தொடர்வது வழக்கமான விஷயமாக உள்ளது.

வழக்கு தொடர்ந்தால் வாயை அடைத்து விட முடியும் என்று நினைப்பது தவறான கருத்து. எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊழலை மறைக்க முயற்சித்தால், ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் தொடர்பான இரண்டாவது பட்டியலை வெளியிடுவோம். இரண்டாவது பட்டியல் முதல் பட்டியலை விட பத்து மடங்கு அதிகமானதாக இருக்கும்.

தமிழகத்தில் பாஜகவை திமுக தான் பிரதான எதிர்க் கட்சியாக உருவாக்கி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சி என்பது பாஜகவின் நோக்கமல்ல; தமிழகத்தில் ஆளும் கட்சியாக பாஜக மாற வேண்டும்.

சொல்லப்போனால், நம்பர் 3 பார்ட்டி என்பது எங்கள் இலக்கல்ல; நம்பர் 1 பார்ட்டியாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like