1. Home
  2. தமிழ்நாடு

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல டி.வி. நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை அதிகமா இருக்கு - பகீர் கிளப்பிய நடிகை குட்டி பத்மினி..!

1

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் புகார்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார்கள் தரப்பட்டன.

தமிழ் சினிமாவிலும் இதேபோல ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரபல நடிகை குட்டி பத்மினி இது தொடர்பாக சில பரபர தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தற்போது தமிழ் டிவி துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதாகக் கூறிய குட்டி பத்மினி, இதனால் பல பெண்கள் தற்கொலை கூடச் செய்து கொண்டு இருப்பதாகக் கூறி அதிர வைத்துள்ளார். பிரபல ஆங்கில டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக வெளிப்படையாகவே அவர் பேசியுள்ளார்.

டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி.துறை போன்று சினிமாவும் ஒரு தொழில் தான். இதனை ஏன் உடல் வியாபாரமாக மாற்றுகிறார்கள்?. இது மிகவும் தவறானது. தமிழ் டிவி சீரியல்களில் பெண் நடிகர்களிடம் இருந்து இயக்குனர்களும் டெக்னீஷியன்களும் பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.

பாலியல் துன்புறுத்தலை நிரூபிக்க முடியாததால் பல பெண்கள் புகார் செய்ய முன்வருவதில்லை. அதேபோல், சில பெண்கள் நன்றாக சம்பாதிப்பதால் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்கிறார்கள். அதையும் மீறினால் நடிகர்களுக்கு தடை செய்யப்படும் சம்பவமும் நிகழ்கிறது. இன்னும் சிலர் நடிகையாக நல்ல சம்பளம் கிடைப்பதால் இதைப் பொறுத்து கொள்கிறார்கள்.

யாராவது ஒருவர் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசினால் அவர்கள் பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேர்கிறது.சின்மயிக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தேன். ஆனால் அவரை நடிகர் ராதாரவி சங்கத்தில் இருந்து நீக்கினார். ஸ்ரீரெட்டிக்கு உறுப்பினர் அட்டை கூட கொடுக்கப்படவில்லை. இதனால் அவரால் சீரியல்களில் நடிக்க முடியாத நிலை உள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஆதாரத்துக்கு எங்கே போவார்கள்? வேண்டும் என்றால் சிபிஐ போல் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தலாம்" என்றார்.

மேலும், குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாகக் குட்டி பத்மினி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனக்கு நேர்ந்த கொடுமை குறித்து என் அம்மா சண்டை போட்டார். இதனால் உடனடியாக அந்த இந்திப் படத்திலிருந்து என்னைத் தூக்கி விட்டார்கள். இப்படிப் பல சிரமங்கள் இருக்கும் போது ஆதாரத்திற்கு எங்கே போக முடியும்" என்று அவர் வேதனை தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like