1. Home
  2. தமிழ்நாடு

தக்காளியால் ஒன்றல்ல.. இரண்டல்ல... ரூ. 4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி.. அதுவும் 45 நாட்களில்..!

1

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி (48). கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. தக்காளி விவசாயத்தில் அதிக லாபம் அடைந்தது குறித்து விவசாயி முரளி கூறியதாவது:  

கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் எனக்கு ரூ.1.5 கோடி கடன் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடையால் விளைச்சலும் சரியாக இல்லை.  

ஆனால் இந்தாண்டு எனக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது. எனது நிலத்தில் விளைச்சலும் அமோகமாக இருந்தது. இதுவரை 35 முறை அறுவடை செய்து விட்டேன். எனது வயலில் இன்னும் 15 முதல் 20 முறை தக்காளி அறுவடை செய்யலாம்.  

தக்காளிக்கு கோலார் வேளாண் சந்தையில் நல்ல விலை கிடைப்பதால், 130 கி.மீ. தூரம் பயணம் செய்து தக்காளியை விற்பனை செய்கிறேன். கடந்த 45 நாளில் ரூ.4 கோடிக்கு தக்காளியை விற்பனை செய்தேன். இந்த பணம் மூலம் மேலும் நிலத்தை வாங்கி தோட்டக்கலையை நவீன தொழில்நுட்பத்துடன் மிக பெரிய அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு முரளி கூறினார்.

Trending News

Latest News

You May Like