1. Home
  2. தமிழ்நாடு

ஒன்றல்ல... ரெண்டல்ல... மொத்தம் 17 லட்சம் மோசடியில் இழந்த பிக்பாஸ் பிரபலம்..!

Q

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிகள் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த மோசமான நினைவுகள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பேசுகையில் சௌந்தர்யா தான் 8 வருஷமாக மாடலிங் மற்றும் நடிப்பு மூலமாக 17 லட்சம் சேமித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரே ஒரு போன் காலில் என்னை மிரட்டியதால் அந்த பணம் மொத்தமாக போய்விட்டது.

அதுவும் கடந்த மாதம் தான் நான் ஏமாந்தேன். அந்த மன அழுத்தத்தில் இருக்கும்போது தான் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கூட என்னுடைய அப்பாவிடம் கடன் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறேன் என்று பேசி இருந்தார். இது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

பிரபலமாக இருக்கும் இவர் எப்படி ஆன்லைனில் பணத்தை ஏமாந்தார் என்று உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போன் எனக்கு வந்தது, அதில் உங்க போனை நாங்க ஹேக் செய்து விட்டோம். நீங்க இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறீங்க உங்களை பற்றி நாங்க தவறாக செய்திகள் வெளியிடுவோம், உங்களுடைய பெயரை கெடுக்க எங்களுக்கு ஒரு நொடி போதும்..

நாங்கள் அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்கணும் என்று மிரட்டுனாங்க. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியாம நான் பணத்தை கொடுத்துட்டேன். அதிலும் நீங்க யாருக்கும் மெசேஜ் அனுப்பியோ அல்லது கால் பண்ணியோ சொல்ல கூடாது. ஒரு நிமிடத்திற்குள் எங்களுக்கு பணம் வரணும் என்று சொன்னதால் நான் என்னை அறியாமல் ஏதோ செய்து விட்டேன். அது பணம் எல்லாம் போய்விட்டது என்று சொல்லி இருக்கிறார்.

இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. இது பற்றி நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் சனம் ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில் "சௌந்தர்யா யாராலும் ஏமாற்றப்படவில்லை. அவள்தான் ஏமாந்து இருக்கிறார். ஒரு நபர் மிரட்டி பணம் கேட்கிறார் என்றால் இவர் உடனே பணத்தை அனுப்புகிறார்.. இவர் எந்த தப்பை மறைப்பதற்காக உடனே பணத்தை கொடுத்தார்?என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

Trending News

Latest News

You May Like