"ஒன்றல்ல, ரெண்டு" இது விஜய பிரபாகரன் ஸ்டைலு ! விசில் போடும் கேப்டன் ரசிகர்கள் !
"ஒன்றல்ல, ரெண்டு" இது விஜய பிரபாகரன் ஸ்டைலு ! விசில் போடும் கேப்டன் ரசிகர்கள் !

கேப்டன் விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து விட்டதாகவும், அதற்கு அவர் இரு தொகுதிகளை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் இரண்டும் கோலோச்சி வந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் அரசியல் களம் கண்டார். நகர்புறம் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் விஜயகாந்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து மாறி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவையில் கம்பீரமாக அமர்ந்தார். பின்னர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே கருத்து வேறுபாடு உருவாகி கூட்டணிக்கு குந்தகம் ஏற்பட்டது.
ஆனாஸ்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தேர்தல் கூட்டணிக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, கேப்டன் விஜயகாந்த்தை வீடு தேடிச் சென்று சந்தித்தார். இதனால், தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து வருகிறது.
அதே வேளையில், கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரது வாரிசான விஜய பிரபாகரனை இந்த தேர்தலில் களம் இறக்கியே ஆகவேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதாம்.
ஆனால், கட்சியில் விஜய பிரபாகரன் வலுவடைந்து விடக்கூடாது என உள்ளடி வேலைகளும், சில நெருக்கடிகளும் இப்போதே ஏற்பட்டுள்ளதாம். இதை எல்லாம் தாண்டி விஜய பிரபாகரன் தேர்தல் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது என கேப்டன் விசுவாசிகள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
எனவே, தேமுதிக கட்சி துவங்கி முதன் முதலில் 2006-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும்.
அல்லது 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். எனவே, அந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்களாம்.
இந்த இரு தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளிலும் கூட விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளது என கண் சிமிட்டுகின்றனர் தேமுதிகவினர்.
கேப்டன் விஜயகாந்த் போலவே அவரது வாரிசும் அதிரடி காட்ட தயாராகிவிட்டாராம்.
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என சும்மாவா சொன்னார்கள்....!