1. Home
  2. தமிழ்நாடு

திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் தான்.. சூர்யா கருத்துக்கு சீமான் முழு ஆதரவு !

திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் தான்.. சூர்யா கருத்துக்கு சீமான் முழு ஆதரவு !


நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட்‌ போன்ற ‘மனுநீதி' தேர்வுகள்‌ எங்கள்‌ மாணவர்களின்‌ வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும்‌ பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள்‌ பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும்‌ வயிற்றிலும்‌ அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள்‌ தண்டனையாக மாறுகிறது என கூறியிருந்தார்.  

மேலும் சூர்யா தனது அறிக்கையில், உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். 


இதனால் சூர்யாவின் கருத்து ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதேநேரத்தில் நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,  'நீட்' தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். 

அவருக்கு என்னுடைய  வாழ்த்துகளும், பாராட்டுகளும் என கூறியுள்ளார். சூர்யா திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான் என சீமான் பதிவிட்டுள்ளார். 


newstm.in

Trending News

Latest News

You May Like