ஜனவரி 5 முதல் 8 வரை கிடையாது.. வெளியானது திடீர் அறிவிப்பு..!

கோவை மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கான நோ்காணல் 2022 ஜனவரி 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கோவை டவுன்ஹாலில் உள்ள கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு, நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் நடைபெறும் மாற்று தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.