ஒரு பெண்ணையும் விடல..கோவை காதல் மன்னன் தர்ஷனை வெளுத்து வாங்கிய இயக்குனர் மோகன் ஜி..!
கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருபவர் தர்ஷன். இவர் கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் இவர் மீது அதே கல்லூரியில் படித்த மாணவிகள் புகார் அளித்தனர். விசாரணையில் கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து காதலிப்பதாக கூறி ஏமாற்றி 20 மாணவிகளிடம் அத்துமீறியது தெரியவந்தது. இது கோவை மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு கூட சந்தேகம் ஏற்படாத வகையில் பெண்களை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவின்படி வழக்குப்பதிந்து, ஸ்ரீ தர்சனை கடந்த ஜூலை 22ம் தேதி கைது செய்தனர்.
போலீசார் ஸ்ரீ தர்சனின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஏராளமான அந்தரங்க படங்கள் , வீடியோக்கள் இருந்துள்ளது. ஸ்ரீதர்சனின் காதல் வலையில் விழுந்த சில மாணவிகள் வெளியே சொல்லாமல் மறைத்து விட்ட நிலையில், தற்போது துணிந்து சில மாணவிகள் அளித்த புகாரால் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கல்லூரி மாணவிகள் காதல் போர்வையில் ஏமாற்றும் நபர்களிடம் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி, எத்தனை முறை காவல்துறை சொன்னாலும், திரைப்படங்களில் சொன்னாலும், செய்திதாளில் செய்தி வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
எத்தனை முறை காவல்துறை சொன்னாலும், திரைப்படங்களில் சொன்னாலும், செய்திதாளில் செய்தி வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்... pic.twitter.com/2tvlUurqd0
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 23, 2024
எத்தனை முறை காவல்துறை சொன்னாலும், திரைப்படங்களில் சொன்னாலும், செய்திதாளில் செய்தி வந்தாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்... pic.twitter.com/2tvlUurqd0
— Mohan G Kshatriyan (@mohandreamer) July 23, 2024