1. Home
  2. தமிழ்நாடு

20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை... கலந்தாய்வு முடிவில் அதிர்ச்சி !

20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை... கலந்தாய்வு முடிவில் அதிர்ச்சி !


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பாமல் இருப்பது அதிகரித்து வருகிறது. போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இந்தாண்டு 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களை நிரப்புவதற்கான இணைய வழி கலந்தாய்வு, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று வரை இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

மொத்த கலந்தாய்வுக்கான இடங்கள் - 1,63,154 கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் - 69,752 (62.9%) கலந்தாய்வை புறக்கணித்தவர்கள் - 41,084 (37.3%). இதன் மூலம் பொது கலந்தாய்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

12 அரசு பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டுமே 100 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளன. இதில், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும்.

அதேநேரத்தில் தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 16 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுக் கலந்தாய்விற்கு பிறகும் 461 பொறியியல் கல்லூரிகலில் உள்ள 56.4 சதவீதம் இடங்கள் காலியாகவே உள்ளன.

20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை... கலந்தாய்வு முடிவில் அதிர்ச்சி !

பொதுக்கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,10,836 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் 69,752 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் எத்தனை கல்லூரிகளில் எத்தனை சதவிகிதம் பேர் சேர்ந்துள்ளனர் என்ற தகவலும் இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, 13 கல்லூரிகளில் 100 சதவீதம், 26 கல்லூரிகளில் 90-99 சதவீதம், 100 கல்லூரிகளில் 50-89 சதவீதம், 128 கல்லூரிகளில் 25-49 சதவீதம், 91 கல்லூரிகளில் 10-24 சதவீதம், 83 கல்லூரிகளில் 1-9 சதவீதம், 20 கல்லூரிகளில் 0 சதவீதமும் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக கூறப்படுகிறது

newstm.in

Trending News

Latest News

You May Like