1. Home
  2. தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை வரும் அக். 28-ம் தேதி தொடங்கும்! வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்!

வடகிழக்கு பருவ மழை வரும் அக். 28-ம் தேதி தொடங்கும்! வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்!


இந்த வருட வடகிழக்கு பருவ மழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்க உள்ளதாக தென் மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இது தொர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழகம், சென்னை மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் , தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்த வருட வடகிழக்கு பருவ மழை வரும் அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களில் பெய்யும்.

வடகிழக்கு பருவ மழை வரும் அக். 28-ம் தேதி தொடங்கும்! வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்!

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம்,ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வட கிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடிய நிலையில் வடகிழக்கு பருவ மழையானது தமிழகம் புதுவை தெற்கு ஆந்திரா ராயலசீமா தெற்கு கர்நாடகா பகுதிகளில் வரும் அக்டோபர் 28-ம் தேதி முதல் தொடங்கக்கூடும்.

இந்த ஆண்டிற்கான வட கிழக்கு பருவ வட தமிழகத்தில் இயல்பையொட்டியும் தென் தமிழகத்தில் இயல்பக விட குறைவாக பதிவாகும் என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like