சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்..! மீன்களின் விலையும் கிடுகிடு உயர்வு..!

பொதுவாக காசிமேடு மீன் சந்தை என்றாலே விடுமுறை நாட்களில் திருவிழா போன்று காட்சியளிக்கும். வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளாமான மக்கள் மீன் வாங்குவதற்கு இங்கு வருவது வழக்கம்.
இதனால் வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் காசிமேடு என்பது கூட்ட நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் இதைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் முடிந்ததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இன்று காலை 110 விசை படகுகள் வரை கரைக்கு திரும்பியதால் பெரிய வகை, சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன.
இன்று காசிமேட்டில், வஞ்சிரம் மீன் கிலோ 700-ல் இருந்து 1400 ஆக உயர்வு, வவ்வால் - ரூ.650, கடம்பா - ரூ.750, இறால் - ரூ.800, சங்கரா பெரியது - ரூ.500, நண்டு - ரூ.650-க்கு விற்பனை ஆனது. மீன்களை போலவே, சிக்கன், மட்டன் கடைகளிலும் இன்று கூட்டம் அலைமோதியது.