விரைவில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் அகற்றப்படும்..!

திருவண்ணாமலையில் நேற்று பல்வேறு மடங்கள் மற்றும் சமய அமைப்புகளின் சாதுக்கள் மற்றும் தலைவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அப்போது, சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கினார். கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவகம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. அசைவ உணவகங்களை அகற்ற வேண்டும் என்று சாதுக்கள் வேண்டுகோள் விடுத்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அசைவ உணவகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே சனாதன தர்மம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.