1. Home
  2. தமிழ்நாடு

ஆண் பக்தா்கள் மட்டும் பங்கேற்ற அசைவ விருந்து : 3 ஆயிரம் கிடாக்கள் விருந்து.. திண்டுக்கல்லில் விநோத திருவிழா!

1

திண்டுக்கலில் உள்ள விராலிப்பட்டி என்ற கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  வத்தலகுண்டு சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வருகை தந்து வழிபடுவதுடன் எண்ணற்ற வேண்டுதல்களையும் வைத்து செல்கின்றனர்.

அந்த வகையில் இந்த கோட்டை கருப்பணசாமி கோவிலில் மது அருந்தும் நபர்கள் ஒரு முறை வந்து சாமியிடம் மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்து கோவில் பூசாரியிடம் கயிறு கட்டி சென்றால் அத்துடன் மது அருந்துவதை விட்டுவிடுவார்கள் என கூறப்படுகிறது. இதனால் குடும்ப பெண்கள் தங்களது வீட்டில் உள்ள ஆண்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையின்போது இந்த கோட்டை கருப்பணசாமி கோவிலுக்கு அழைத்து வந்து சத்தியம் செய்ய வைத்து கயிறு கட்டி விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

Dindigul

மேலும், இந்த கோவிலில் முக்கியமான திருவிழா என்றால் ஆடி மாதம் அமாவாசை முடிந்த முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திருவிழா தான் என கூறுகின்றனர். ஆடி மாதம் துவங்கும்போதே இக்கோவிலில் வேண்டுதல்கள் வைத்த ஏராளமான பக்தர்கள் சார்பாக ஆட்டு கிடா பலி கொடுப்பதற்காக ஆட்டுக்குட்டிகளை விராலிபட்டியில் அமைந்துள்ள கோட்டை கருப்பணசாமி கோவிலில் வந்து விட்டு விடுவார்கள்.

இந்த நிலையில், ஆடி கடைசி வெள்ளி முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு கோட்டை கருப்பண சாமிக்கு காவு கொடுக்கும் நிகழ்ச்சியில் காணிக்கையாக வழங்கப்பட்ட 3 ஆயிரம் கிடாக்கள் பலியிடப்பட்டன. முன்னதாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஆண் பக்தா்களுக்கு பிரசாதமாக கிடா விருந்து நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மறுநாள் அதிகாலை வரை இந்த அசைவ விருந்து பரிமாறப்பட்டது. பிறகு சூரிய உதயத்துக்கு முன் எஞ்சிய பிரசாதம் கோயில் அருகே பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Dindigul

இந்த விழாவுக்காக வத்தலகுண்டுவில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் விடியவிடிய இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் வத்தலக்குண்டு காவல்துறையினா் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Trending News

Latest News

You May Like