வஉசி, பாரதியை யாருக்கும் தெரியாது.. குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு..!

தலைநகர் டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், ஆனால், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தாங்கிய மேற்கு வங்க ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.