1. Home
  2. தமிழ்நாடு

இன்று நோபல் பரிசுகள் அறிவிப்பு!

இன்று நோபல் பரிசுகள் அறிவிப்பு!


உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிற நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

தொடர்ந்து 5 நாட்கள் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில் முதல் நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறு தினம் அக்டோபர் 7ம் தேதி வேதியல் துறைக்கும், அக்டோபர் 8ல் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளன.

அக்டோபர் 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இறுதி நாளான அக்டோபர் 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகின்றன.

Trending News

Latest News

You May Like